நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்து 954 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் இருவர் பலியாகியுள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.
மூன்று வீடுகள் முழுமையாகவும், 83 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
211 குடும்பங்களைச் சேர்ந்த 793 பேர் 13 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் மன்னார் மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்ப்டுள்ளனர்.