சீரற்ற காலநிலையால் கடற்றொழில் முடக்கம்

சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் கடற்றொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மாவட்டம் உட்பட வடக்கில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகின்றது.

இவ்வாறு காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles