நுவரெலியா உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 214 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் காற்று, வெள்ளம், மண்சரிவால் 9 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 145 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
32 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் 9 பேர் காயமடைந்துள்ளனர்.










