அரசாங்கத்தில் இருந்து எவருக்கும் விலகிச் செல்ல முடியும். அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். யார் வெளியேறினாலும் அரசாங்கத்தை விழ இடமளிக்க மாட்டோம் எனவும் எமது பக்கமிருந்து யாராவது சென்றால் எதிரணியில் இருந்து எமது தரப்பிற்கு சிலரை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக நெகும வீதி நிர்மாண இயந்திரக் கம்பனியின் பூரண மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும் படகமுவ வாகனத் தரிப்பிடம் மற்றும் சுகாதார வசதி நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக அண்மையில் அங்கு மேற்பார்வை விஜயமொன்றை அமைச்சர் மேற்கொண்டார். விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,
யார் வெளியேறப் போகிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதை அவர்களிடம் கேட்க வேண்டும். யாருக்கும் ஒதுங்கிச் செல்லமுடியும்.
அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை.
அவர்கள் வெளியேறினாலும் அரசாங்கத்தை வீழ இடமளிக்க மாட்டோம். எமது பக்கமிருந்து சென்றால் எதிரிணியில் இருந்து எமது தரப்பிற்கு சிலரை எடுப்போம். கோவிட் காரணமாக நாங்கள் மெதுவாக பயணித்தாலும், அரசாங்கத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.










