சுகாதார சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பு – மலையக வைத்தியசாலைகளில் நோயாளிகள் அவதி!

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு – நுவரெலியாவில் நோயாளிகள் பாதிப்பு

அரச வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஏனைய சுகாதார சேவையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
நுழைவாயில் முன்பாக இன்று (16) மதியம், அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் தொழிலாளர் சேவையாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன பாதிக்கப்பட்டன.

வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

அதேவேளை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றன.

வரெலியா மாவட்ட பொது பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles