ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று காலை கூடியது. இதன்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. சந்திரிக்கா அணியும் அரசியல் சபையைக்கூட்டி பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.










