சுற்றுலா வழிகாட்டி போதைப்பொருளுடன் நானுஓயாவில் கைது!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியொருவர் ஹாஷ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை (23) நானுஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பொதியொன்றுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது அவரிடமிருந்து 1.030 மில்லிகிராம் ஹாஷ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய சிலாபம் – ஹலவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு போதைப் பொருள் கிடைக்கும் வழிகள் மற்றும் அவரது விநியோக வலையமைப்பு குறித்து நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles