இலங்கையின் சுற்றுலாத்துறைத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது.
“சனத் ஜயசூரிய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். மேலும் அவர் தானாக முன்வந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை இலக்காகக் கொண்ட இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டார்” – என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
