சூரியனில் வெப்பப் பேரலை நிகழ்வு ஏற்பட்டதன் எதிரொலியால் ஓரிரு நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரிய துகள்களில் ஏற்பட்ட வெடிப்பால் அதிவேக சூரியக்காற்று சூரியனில் இருந்து வெளியானது.
இது பூமியின் வளிமண்டலத்தை தாக்கி வரும் 31 ஆம் தேதி சூரிய புயலாக உருவெடுக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் ஜி.பி.எஸ். சேவை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களையும் இந்த சூரிய பேரலைகள் செயலிழக்க செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆபத்தான கதிர்வீச்சு விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், மின் வழிதடங்களில் திடீர் உயர் மின் அழுத்த மாறுபாடு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.