கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஹுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
2024 இல் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் குமார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான முனையங்களில் மாத்திரம் கடந்த 29 நாட்களில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.










