அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு இன்று (09) தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலையும், அதன் பின்னர் பொதுத்தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர்.










