செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நாடு முடக்கப்பட வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கு இதைவிடவும் மாற்றுவழி கிடையாது என்று விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 06 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒருவாரகால நீடிப்பதால் எதிர்ப்பார்த்த மாற்றம் ஏற்படாது. எனவே, முடக்கநிலை தொடரவேண்டும்.
அப்போதுதான் மக்களை பாதுகாக்க முடியும். தற்போதைய நிலையில் இருந்து மீண்டால்தான் பொருளாதாரத்தையும் சீர்செய்யலாம். தெளிவானதொரு ஏற்பாட்டுத் திட்டம் அவசியம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – எனவும் அவர் கூறினார்.










