சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா இன்று வெனிசூலாவில் காலமானதை கியூபா அதிபர் உறுதி செய்துள்ளார்.
சேகுவேரா பொலிவியாவில் தனது 40வது வயதில் (1967இல்) சுட்டுக் கொல்லப்பட்டவேளை கமிலோவுக்கு ஐந்து வயதாக இருந்தது. கமிலோவும் தொடர்ச்சியாக மார்க்ஸிய விடுதலை இயக்கங்களில் தான் இயங்கி வந்தார்.
மேலும் “சேகுவேரா கற்கை நிலையம்” என்கிற அமைப்பையும் நடத்தி வந்தார்.
சேகுவேராவின் பிரசித்தி பெற்ற “பொலிவியன் டயரி” உள்ளிட்ட நூல்களை கமிலோ தனது முன்னுரையுடன் இந்த அமைப்பின் மூலமாக பதிப்பித்தும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.