” புதிய பிரதமரை உடனடியாக நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டும். ” – என்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியும் பிரதமருமே முழுப் பொறுப்பு. அதனால்தான் இருவரையும் பதவி விலகக் கோரி மக்கள் ஒரு மாதத் துக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் பதவியி லிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியுள்ளார். இதையடுத்து முழு அதிகாரங்களும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றுவிட்டன. இது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
இதனிடையே மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களும் , வன்முறைச் சம்பவங்களும் தீவிரமடைந்துள்ளன. எனவே, புதிய பிரதமரை உடனடி நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பதவியிலிருந்து விலக வேண்டும். அப்போதுதான்நெருக்கடி நிலைமைக்கும் தீ ர் வு கிடைக்கும் – என்றார்.
