இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தச் சந்திப்பு இன்று மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடை பெறவுள்ளது என்று இலங்கைத் தமிழ ரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித் தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
இதில், இலங்கைத் தமிழரசுக் கட்சி யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோ ரும் பங்கேற்கவுள்ளனர். தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவுடன் பேசுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி இறுதியாகக் கூட்டிய மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட் டது.
இதைத் தொடர்ந்து, சந்திப்புக்கான நேரம் கோரி ஜனாதிபதி அநுரகுமார வுக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப் பப்பட்டிருந்தது. பேச்சுக்கான நல்லெண்ண சமிக்ஞை யாக வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதில்லை என்றும் அந்தக் கட்சி தீர்மானித்திருந்தது என்பதும் குறிப் பிடத்தக்கது.