ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்திருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
