நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால் அதனை எதிர்கொள்வதற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் என்று அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
” எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயார். ஆட்சி கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால் அதனை எதிர்கொள்வதற்கும் நான் தயார்.
வற் வரி அதிகரிப்பு பற்றி தற்போது பேசுகின்றனர். அதனை நாம் குறைத்ததால்தான் எமக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென தற்போது கூற முடியாது. ஆனால் அந்த பட்டியலில் எனது பெயர் இல்லை என்பதை மட்டும் கூறமுடியும். ஜனாதிபதி வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார்.” – என்றார்.
