ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று மாலை 4 மணிக்கு பின்னர் முப்படையினரும் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருடன் இணைந்து செயற்படும் வகையில் அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நாளை(19) முதல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனிடையே, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் இடங்களை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகின்றது.
