நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதி தேர்தலாகவே அமையக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வாரியபொலவில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டில் பொருட்களின் விலைகள் குறையவுள்ளன. மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது. வட்டி வீதமும் குறைவடையவுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டவுள்ளன. தனிஒருவராக வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகியுள்ளார் ரணில். நாட்டை சிறப்பாக வழிநடத்துகின்றார்.” எனவும் அகில விராஜ் குறிப்பிட்டார்.
