உரிய திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருப்பதாக இலங்கை ராமன்ய மகா நிகாய மாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய மகுலெவே விமல தேரரைச் சந்தித்தபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ராமன்ய மகா நிகாய சங்க சபையின் தலைமையகத்திற்கு இன்று (05) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை ராமன்ய மகா நிக்காயவின் மாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய மகுலெவே விமல தேரரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், இலங்கை அடைந்துள்ள பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் குறித்தும் மாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார்.










