ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை (25) அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது தேர்தல் திகதி, வேட்பு மனு தாக்கல் ஏற்கும் திகதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.