ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை எனவும், உரிய தினத்தில் தேல்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஹோமாகம பஸ்தரிப்பு நிலைய வளாகத்தில் இன்று (28) நடைபெற்ற “ஜெயகமு ஸ்ரீலங்கா” கொழும்பு மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.