ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் அமைச்சரவைக்கு எதையும் அறிவிக்கவில்லை. அவரின் பதவி காலம் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார் .
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது, ” ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பல தரப்பினரும்கோரு வருகின்றனர். எனவே, ஜனாதிபதியின் பதவி காலம் பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா, அல்லது தான் பதவி விலகுவது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு ஏதேனும் தெரியப்படுத்தினாரா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவ்வாறு எதுவும் கலந்துரையாடப்படவில்லை. அப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டுவருவது தொடர்பிலும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
