ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தைத்திருநாள் வாழ்த்து

 

விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. உலக வாழ் இந்துக்களுடன் இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர இந்து மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தைப்பொங்கல் தினப் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் கலாசார ரீதியாகச் சிறப்பாகக் கொண்டாடுவதன் மூலம், எதிர்காலத்தில் வளமான பயிர் அறுவடைக்கு சூரிய பகவானின் ஆசீர்வாதங்களும் பாதுகாப்பும் கிடைக்கின்றன என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகக் காணப்படுகின்றது.

சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்துடன் இணைந்த அனைத்து இலங்கையர்களும், தைப்பொங்கல் தினத்தை மிகுந்த மரியாதையுடன் எதிர்பார்க்கின்றனர்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். இது, பசுமை விவசாயத்துக்கான தேசிய கொள்கைக்குப் பலன் தரும் என்பதே பெரும்பான்மையானோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

அதற்கான நோக்கத்துக்கு இந்தத் தைப்பொங்கல் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக நான் நம்புகிறேன்.
இந்த வருடமும், சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே தைப்பொங்கலை அனைவரும் கொண்டாட வேண்டும்.

பாதுகாப்பான நாட்டின் செழிப்பு மற்றும் வளத்துக்காக அர்ப்பணித்துள்ள உங்களுக்கு, சூரிய பகவானின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இத் தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது. இந்த மாற்றம் நம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா – அறுவடை விழா. இதுவே உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்ற தைப்பொங்கல் விழாவுக்கான அடிப்படையாகும்.

தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். தமிழர்கள் தம் வாழ்வில் கொண்டாடி மகிழ்கின்ற பண்டிகைகளில் உன்னதமானதோர் நிகழ்வு இந்த தைத்திருநாளாகும்.

உழவர் பெருமக்கள் தங்களின் கடின உழைப்புக்கு பயன் நல்கிய இயற்கைக்கு, தமது நன்றியுணர்வினைத் தெரிவிக்கும் திருநாளாக இத்தைத்திருநாள் விளங்குகின்றது. அதனால் இத்தைப்பொங்கல் திருநாளிலே அனைவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மகிழ்கின்றனர். இயற்கையின் பெருமைக்கு முக்கியத்துவம் நல்கும் இத்திருவிழா, நன்றி மறவாத உன்னத பண்பினை நம் அனைவருக்கும் எடுத்தியம்பி நிற்கிறது.

இனம், மதம், மொழி ஆகியவற்றினால் நம் தேசம் வேறுபட்டிருந்தாலும் – நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்று சொல்வதிலே பெருமை கொள்வோம். நம் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாக அமைவதே இத்தேசத்தின் சுபீட்சத்துக்கான அத்திவாரம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.இலங்கையில் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இத்தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது.

இந்த மாற்றம் நம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும். அனைத்து மக்களும் நிறைந்த சௌபாக்கியத்துடன், அமைதியும் சமாதானமும் நின்று நிலைக்கும் வகையில், மகிழ்வோடு வாழ இந்த நன்னாளிலே எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான நன்னாளிலே, தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கும் எம் சக உறவுகளாகிய தமிழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

…….

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பக்தி மற்றும் மகிழ்ச்சியாக அமையக்கூடிய தைத்திருநாளாக இத்தினம் அமைய எமது வாழ்த்துக்கள்.
……
……….

உலகமெங்கும் வாழும் இந்து பெருமக்கள் வருடந்தோறும் தைமாதம் முதலில் கொண்டாடும் மங்கள திருநாள் தைபொங்கலாகும். இந்த நன்நாளில் பெருந்தோட்ட மக்களுக்கு இ.தொ.கா அதன் சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது என இ.தொ.கா பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான, ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இதுவரை காலமும் தீர்க்கப்படாத கோரிக்கைகள், மலையக சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குத் தக்க பரிகாரம் காண
இப்பொங்கல் பெருநாள் வழிசமைக்குமென்ற நம்பிக்கையோடு இவ்வருடத்தில் மலையக மக்களுக்கு மிகவும் நன்மையான காரியங்கள் கிட்டும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஏர்பூட்டு உழவனின் எழுச்சிப் பொங்கல் எல்லார் வாழ்விலும் மலர்ச்சியையும் மங்களத்தையும் ஏற்படுத்த வேண்டும் என பழைய எண்ணங்கள் சிந்தனைகள் யாவற்றையும் களைந்து பொறுப்புள்ள பிரஜையாக வாழவும் வரும் நாட்களெல்லாம் சுறுசுறுப்பான நாட்களாக நகரவும் சகல சௌபாக்கியங்களும் அனைவருக்கும் சமமாக கிட்டவும் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

எமது மக்களின் இல்லங்களில் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபத் தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

உழவர் திருநாள் என்றும் தமிழர் பெருநாள் என்றும் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் எமது மக்கள், இயற்கையை வணங்கிய எமது முன்னோர்கள் வழிநின்று தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக காலந்தோறும் பாதுகாத்து வருகின்றனர்.

உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாகவும், மனிதனுக்கும், இயற்கையின் கொடைகளுக்குமிடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் கலாசார பண்டிகையான தைப்பொங்கல் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் திருவிழாவாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

உலக வாழ் தமிழ் மக்கள் தொன்று தொட்டு மேற்கொண்டு வரும் மனிதன் சூரிய பகவான் மீதான வழிபாட்டின் வெளிப்பாடாகவும் தைப்பொங்கல் இருந்து வருகின்றது.

இந்த தை திருநாளில் தமிழ் மக்களுக்கும் நாட்டின் ஏனைய இன மக்களுக்கும், நாட்டிற்கும் சௌபாக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க எனது நல்வாழ்த்துக்கள்” – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles