ஜனாதிபதி, பிரதமர் யாழில் இன்று பிரச்சாரம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகப் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கவே இருவரும் யாழ்ப்பாணம் வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வரும் இருவரும் பாஷையூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

இதேநேரம், மேற்படி இருவரும் பல்வேறு இடங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles