ஜனாதிபதி மௌனம்: மொட்டு கட்சியின் ஆட்டம் 26 இல் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு தமது கட்சி விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நேற்று முன்தினம்(13) ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக பொதுஜன பெரமுன கூறியுள்ளது.
இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் பஸில் ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ள ஏழாவது கலந்துரையாடல் இதுவாகும்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில், நாட்டின் அபிவிருத்தி தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதனிடையே, பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி அனுராதபுரம் கலாவாவி தேர்தல் தொகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அங்கிருந்து தொகுதி மட்டத்தில் பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles