ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை கட்சியின் சார்பில் களமிறக்குவதா அல்லது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படுமா என்பது தொடர்பில் கட்சியே தீர்மானிக்கும் எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.
கட்சியால் எடுக்கப்படும் முடிவு தன்னால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.