” பதவி என்னை தேடிவருமேதவிர நான் பதவியை தேடி சென்றதில்லை. யாரிடமும் அமைச்சு பதவியை கோரியதும் கிடையாது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனாதிபதிக்கான எமது ஆதரவு தொடரும். அவருக்கு வழங்கும் ஆதரவை நிறுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பலமாகவே உள்ளது. எந்தவொரு தேர்தலை எதிர்கொள்ளவும் நாம் தயார்.”எனவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.










