அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சாதகமாக பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.
சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு வழங்குவது குறித்தும், அதற்கான பரந்தப்பட்ட கூட்டணி சம்பந்தமாகவும் அக்கட்சி ஆராய்ந்துவருகின்றது எனவும் அறியமுடிகின்றது.
மொட்டு கட்சி பிளவுபடுவதை தடுத்தல், எதிரணிகளின் எழுச்சி உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை நோக்கி மொட்டு கட்சி நகர்வதாக தெரிகின்றது.
இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தம்மிக்க பெரேராவும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டுவருகின்றார். எனவே ரணிலா அல்லது தம்மிக்க பெரேராவா என்ற தேர்வு மட்டுமே தற்போது மொட்டு கட்சி முன் உள்ளது.
