யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எந்த காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
