ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகவா ( Yōko Kamikawa) மே 04 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.

இரு நாட்கள் பயணமாக இலங்கை வரும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டவர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

ஜப்பானின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை கண்காணிக்கவுள்ள அவர், சிவில் அமைப்புகளுடனும் பேச்சுகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி தலைவருடனும் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

Related Articles

Latest Articles