தனிமைப்படுத்தல் ஊரடங்காலும், கொரோனா நோய் தொற்றாலும் பலர் இன்று பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதில் அறப் பணியாற்றும் எம் சைவ குருமார் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சமூகத்துக்கும் இந்து மதத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றும் அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் கண்டி மாவட்ட கிளை குருமார்களுக்கும் மற்றும் பிராமண சமாஜனம் குருமார்களுக்கும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தேன்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வழங்கப்பட்ட இந்த உணவுப் பொஜீதிகள் இந்த முடக்க காலத்தில் எம் குருமார்களுக்கான ஒரு சிறிய உதவியாகும்.
தர்மத்தை பாதுகாக்கும் மற்றும் எமது சமூகத்தை அறவழியில் பயணிக்க முன்நிற்கும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுடைய அற தொண்டை தொடர்ந்து ஆற்றி செல்ல நாம் கைகொடுப்பது எமது கடமையாகும்.
மேலும் கண்டி மாவட்டத்தில் வேதங்களை கற்பிக்கும் வேதாந்தா பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு இராஜாங்க அமைச்சர் தலைமையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.” -என்றார்.