தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பதவியேற்றுள்ளமை மலையகத்துக்கு பெரும் சக்தியாக அமைந்துள்ளது என்று பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
“அமரர் ஆறுமுகன் தொண்டமான் எம்மைவிட்டு பிரிவதற்கு முன்னர், எட்டு மாதகாலம் அமைச்சராக இருந்த தருணத்தில் அவருடன் ஜீவன் தொண்டமானும் இணைந்து பயணித்திருந்தார்.தற்போது இராஜாங்க அமைச்சராக செயற்படும் ஒரு வலுவான அரசியல்வாதியாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார்.
ஜீவன் தொண்டமான் ஊடாக அரசாங்கத்தின் சேவைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மலையகத்தில் முன்னெடுக்கப்படும். அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு ஜீவன் தொண்டமான் மக்களுக்கு சேவை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் செந்தல் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.