மத்திய மாகாணத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைவாக மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இந்த சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மையில் உயிர் இழந்த சிறுமி இஷாலினியின் மரணம் மலையகம் மட்டும் அன்றி நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந் நிலையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் இன்று நுவரெலியாஇகண்டிஇ மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்களாக மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அபிவிருத்தி தொடர்பாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பிரதானிகளுடனும் இ காவல் துறை இ இராணுவம் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள் உள்ளடங்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணம் முழுவதும் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்தல் மட்டுமல்லாது இ அவர்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் இக் குழு செயற்படும். மத்திய மாகாண ஆளுரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அதிபர்கள், திணைக்கள பிரதானிகள் கல்வி அமைச்சின் செயலாளர், சிறுவரை பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மனித உரிமை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
		