அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், ஏனைய இரு நாட்களில் வீட்டிலிருந்தவாறே மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.
பாடசாலை நடைபெறும் நாட்கள்
திங்கள் , செவ்வாய், வியாழன்.
வீட்டிலிருந்து கல்வி பயிலவேண்டிய நாட்கள்
புதன், வெள்ளி.

