ஜோ பைடன் பின்வாங்கியதுபோல் ரணில் ஒதுங்குவாரா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் பின்வாங்கியதுபோல ரணில் விக்கிரமசிங்கவும் விலகி, வேறு வேட்பாளரை களமிறக்ககூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி, கமலா ஹாரிசை பைடன் பரிந்துரைத்துள்ளார். அதுபோல ரணில் விக்கிரமசிங்க விலகி, வேறு ஒருவரை பரிந்துரைக்கலாம். ஆக கமலா ஹாரிஸ் யாரென்பதை தேடுங்கள்.

குழப்பத்தை ஏற்படுத்துவது ரணிலுக்கு கைவந்த கலை. அந்த கலையைதான் தேர்தல் விடயத்திலும் பயன்படுத்திவருகின்றார். ரணிலை பற்றி எமக்கு நன்கு தெரியும். எனவே, அவரின் குழப்ப வித்தைக்குள் சிக்கிவிட வேண்டாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles