நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினி தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவுச்செய்யப்படவுள்ளது.
இதன்படி சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகரிடம் அது தொடர்பில் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஹிஷாலினி விவகாரம் தொடர்பில் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன. டயகமவுக்கு நேற்று சென்ற விசேட பொலிஸ் குழுவொன்று, ஹிஷாலினியின் பெற்றோர் மற்றும் சகோதரனிடம் சுமார் 10 மணிநேரம் விசாரணையை மேற்கொண்டது.
ஹிஷாலினி விவகாரம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.