டிக்கோயா இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே,கடந்த சனிக்கிழமை (27) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து அங்கு தங்கியிருந்த இவ்விளைஞன், மட்டக்களப்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போல் உத்தரவிற்கமைவாக சம்வப இடத்திற்குச்சென்ற, மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டார்.பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles