டிக்கோயா – புளியாவத்தை வீதி காபட் இடும் பணி ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட டிக்கோயா – புளியாவத்தை பாதைக்கான காபர்ட் இடும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

டிக்கோயா, சாஞ்சிமலை, போடைஸ், டயகம ஆகிய பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய பிரதான பாதையான பாத்போட் வெளி பாதை கடந்த காலங்களில் வாகனங்கள் பயணிக்க முடியாத அளவுக்கு மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.

இந்த பாதையை சீர்திருத்தி தருமாறு அப்பிரதேச மக்களின் சார்பில் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் யோசனைக்கமைவாக, வீதி அபிவிருத்தி அமைச்சினூடாக மூன்று கோடியே 16 லட்சத்து 708 ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு 1.3km தூரம் காபட் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் குறித்த பாதையின் காபட் இடும் வேலை திட்டத்தினை நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் . கிசோர்குமார், மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளர் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

Related Articles

Latest Articles