டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி சாவகச்சேரி இளைஞர் பலி!

யாழ்., சாவகச்சேரியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 24 வயதான நிரோஷ் என்பவரே மரணமடைந்துள்ளார்.

இவர் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியிருந்தவர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles