டெமேரியா தோட்ட வீதியில் பாரிய குழி – விபத்துகள் ஏற்படும் அபாயம்!

பசறையில் இருந்து மீரியபெத்த செல்லும் வீதியில் டெமேரியா தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள வீதியின் நடுவில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதாகவும் இக்குழியானது சுமார் 5,6 அடிகளுக்கும் மேல் ஆழமாக காணப்படுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக நீர் வடிந்து ஓடுவதினால் அவ்விடத்தில் பாரிய குழி ஒன்று இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி பாதையினை சீரசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles