ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் பணிந்தது.