உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ஓட்டங்களையும், இந்தியா 296 ஓட்டங்களையும் பெற்றன.
173 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 444 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின. கோஹ்லி 49 ஓட்டங்களுடனும், ஜடேஜா ஓட்டம் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது.
