திங்கட்கிழமையுடன் (31) ஒப்பிடும் போது, இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (02) அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.307ல் இருந்து ரூ. 321.15 ஆகவும், விற்பனைப் பெறுமதி ரூ. 322 ஆகவும் உள்ளது. முறையே 336.95 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூபாய் 306 ஆகவும் , விற்பனைப் பெறுமதி ரூபாய் 322 ஆகவும் காணப்படுகிறது.
இதேபோல், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 310 மற்றும் ரூபாய் 320 ஆக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.










