தகவல்களை ஒளிக்கும் அதிகாரம் கோப் குழுவுக்கு இல்லை – சஜித் சீற்றம்

” கோப்குழு கூட்டத்தில் மின்சார சபையின் தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை ஊடகங்களுக்கு வழங்காது தடை செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தடை செய்யும் அதிகாரம் கோப் குழுவுக்கோ அல்லது அதன் தலைவருக்கோ கிடையாது. அந்தத் தகவலை அறிய பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் உரிமை உள்ளது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி பதவி விலக வேண்டும், புதிய அரசு உதயமாக வேண்டும், 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராடிவருகின்றனர். ஆனால் இது தொடர்பில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை.

இரண்டரை ஆண்டுகளாக, நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் வரிசைகள் உருவாக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வியை சீர்குலைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழித்த தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எத்தனை பேர் குரல் கொடுத்தாலும், அவர்கள் விலகுகிறார்கள் இல்லை எனவும், அரசியலமைப்பு திருத்தமொன்று கொண்டு வந்தாலும் அது 2025 இலயே கொண்டு வரப்படும் எனக்கூறும் ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் அரசாங்கத்தில் ஒருபோதும் சேர மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles