இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் இன்று (31) ஒரு பவுன் ’22 கேரட்’ தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் ’24 கேரட்’ தங்கத்தின் விலை தப்போது 161,000 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.










