தங்கப்பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள ‘மலை மகன்’ கணேசன் சுதாகரன்!

தாய்லாந்தில் கடந்த 11 ஆம் திகதி (2023.07.11) நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளையைச் சேர்ந்த கணேசன் சுதாகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கைகக்கும் , மலையக மண்ணுக்கும் பெருமை சேர்ந்த சுதாகரனுக்கு பல தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர். எம் மண்ணுக்கு பெருமை சேர்த்த ‘மலை மகனை’ – ‘மலையக குருவி’யும் வாழ்த்தி மகிழ்கின்றது.

கணேசன் சுதாகரனை பாராட்டி கௌரவிக்கும் வகையில் அவருக்கான ஆசிர்வாத பூஜையொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (2023.07.16) முற்பகல் 10 மணிக்கு கம்பளை அம்மன் கோயிலில் நடைபெறும்.

அதன்பின்னர் அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புவனேகபா பாதையில் உள்ள அவரின் இல்லம்வரை சுதாகரன் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படவுள்ளார்.

சுதாகரன் தனது ஆரம்பக் கல்வியை கம்பளை இந்து கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை கண்டி ரணபிம் ரோயல் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

சுதாகரனின் தந்தை தங்கையா கணேசன் கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட புசல்லாவை, நயாபானை தமிழ் வித்தியாலய அதிபராவார். தாயார் புவனேஸ்வரி கணேசன், கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட மாவதுர கலைமகள் தமிழ் வித்தியாலய அதிபவாரார்.

Related Articles

Latest Articles