சவூதி அரேபியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலுக்குள்ளான கர்ப்பவதியொருவர் நேற்று குழந்தை பிரசவித்துள்ளார்.
அந்த குழந்தை சுகதேசியாக இருப்பதாக யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் விடத்தல்பளை கொரோனா தடுப்பு முகாமியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இராணுவத்தினர் யாழ். வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். தனியானதொரு அறையில் பாதுகாப்பான முறையில் பிரசவம் இடம்பெற்றுள்ளது.