தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 7,316 பேர் இதுவரை கைது!

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 7 ஆயிரத்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020 ஒக்டோபர் 30 திகதி முதல் 2021 மே 9 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 351 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நாட்டில் பல பகுதிகளிலும் பொலிஸாரின் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles