தனியார் வகுப்பு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி சடலமாக மீட்பு

தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று காலை கண்டுபிடிக்க பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என பொலிஸார் இன் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த வீதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு பயணித்த மோட்டார் சைக்கிளை மாணவி ஒருவர் நிறுத்திய மாணவி தன்னை பஸ் ஒன்றில் ஏற்றி விடுமாறு கூறியுள்ளார். இதன் போது குறித்த மாணவி மீது சந்தேகம் கொண்ட நபர் அந்த மாணவியை ஏற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிள் வந்த நபர் வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (20) காலையிலேயே வீட்டில் இருந்து சென்ற இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles